Home இலங்கைமானிப்பாயில் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்

மானிப்பாயில் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்

by admin

மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. அந்த வழியால் சென்ற இராணுவத்தினர் கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்ததுள்ளனர்.

அத்துடன், கும்பல் பயணித்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றும் அவ்விடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

நேற்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய் சந்திக்கு அண்மையாக பொன்னாலை வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறைக் கும்பல் கடைக்குள் புகுந்து உரிமையாளரின் கழுத்தில் தாக்கியுள்ளது. அத்தோடு கடையிலிருந்த பொருள்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திவிட்டு தப்பிக்க முற்பட்ட வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் ஒருவரை மட்டும் இராணுவத்தினரால் பிடிக்க முடிந்தது. ஏனையோர் தப்பித்துள்ளனர். அத்துடன் கும்பல் பயணித்த ஸ்கூட்டிப் பப் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறைக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறினர். #மானிப்பாய் #வர்த்தகநிலையத்துக்குள் #அட்டூழியம் #உரிமையாளர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More