Home இலங்கை இலங்கையில் 12,970 பேருக்கு கொரோனா தொற்று…

இலங்கையில் 12,970 பேருக்கு கொரோனா தொற்று…

by admin

இலங்கையில் இதுவரையில் 12,970 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 400 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,492 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனையவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 7,186 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,754 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More