Home இலங்கை கதிரியல் மருத்துவத்துறையின் 125 வருடகால வரலாற்றுச் சிறப்பு பார்வை

கதிரியல் மருத்துவத்துறையின் 125 வருடகால வரலாற்றுச் சிறப்பு பார்வை

by admin

By N.J.Z.Anas ( General sir jhon kotelawala defence university)

கதிரியல் மருத்துவ உலகில் X – கதிர்களின்  கண்டுபிடிப்பானது வரலாற்று மைல்கல்லாகும் ..சிறப்பு வாய்ந்த X- Ray (எக்ஸ்ரேயை)கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் ரோஞ்ஜன் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி ஆவார். 1895ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் திகதி X கதிர்களை கண்டறிந்தமை  மருத்துவ உலகில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்று ரோஞ்ஜன் பொருட்களில் எக்ஸ் கதிர்களின் ஊடுவருவல் பற்றி ஆய்வுகள் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு ஈயத்தட்டை எக்ஸ் கதிர்களுக்கு முன்னர் அவர் பிடித்தபோது, அக்கதிர்கள் அவரது மனைவியின் கையில் இருந்த ஈயத்தட்டின் உருவத்தை மட்டும் அல்லாமல் மனைவியின் கட்டை விரலின் படிமத்தையும் படம் பிடித்திருந்தது.கைவிரல் எலும்புகளின் படங்கள் அவற்றின் நிகழ்களை விடக் கருமையாகக் காட்சியளித்தன. இதன் மூலம் ஒளியினால் ஊடுருவமுடியாத பொருட்களையும் எக்ஸ் கதிர் ஊடுருவிச் செல்லும் என்பதை ரோஞ்ஜன் கண்டுபிடித்து வெளியிட்டார்.இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்காக  ரோஞ்ஜன்  1901ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.இதுவே பெளதிகவியல் துறைக்காக உலகில் முதல் முறையாக வழங்கப்பட்ட நோபல் பரிசாகும.

எக்ஸ் கதிர்கள் கண்டறியப்பட்ட தன் பின்னரேயே கதிரியல் மருத்துவ துறையானது ஆரம்பமானது. இன்று இத் துறையானது பல பரிணாமங்களை அடைந்து உள்ளது. எக்ஸ் கதிர்களின் பின்னர் CT,MRI, fluoroscopy, Nuclear medicine, Ultrasound, sonography என பரந்து விரிந்து மருத்துவ துறையில்  பாரிய பங்களிப்பு செய்கின்றது. நவீன மருத்துவத்தில் எக்ஸ் கதிர்களுக்கு மேலதிகமாக அதி சக்திவாய்ந்த காமாக் கதிர்கள், இலத்திரன் புரோத்தன்கள்,  மற்றும் பீட்டா துணிக்கைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கதிரியல் பிரதானமாக இரு வழிகளில் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகின்றன.அவையாவன நோய்நிலைமைகளை கண்டறிவதற்கும்( diagnosis) , நேரடியாக நோய்களுக்கு சிகிச்சை( Therapy) அளிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன. கதிரியல் மருத்துவ துறை என்றவுடன் பொதுமக்களுக்கு என்புகளின் முறிவுகளுக்கான ( X – கதிர் படம் எடுத்தல்), சுவாசப் பாதையில், உணவுக்கால்வாய்களில் உள்ள அசாதாரண நிலைகளை கண்டறிய X-கதிர் மற்றும் CT scan செய்தல் ஆகியன கண்முன் வருகின்றன. இவையாவும் இலகுவாக diagnosis பிரிவு எனலாம்.


ஆனால் பொரும்பாலான மக்கள் தெரிந்திராத விடயம் தான் உலகில் புற்றுநோய்க்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கதிரியல்  புற்றுநோய் மருத்துவ சிகிச்சை முறை தான் முதன்மை வகிக்கின்றன ( Radiation therapy ). ஆனால் பெரும்பாலான மக்களுக்கள் இது தொடர்பாக அறிந்திருப்பதில்லை. குறிப்பாக சகல விதமான புற்றுநோய்களுகும் வினைதிறனான முறையில் சிகிச்சை அளிப்பதில்  கோபால்ட் டேலி தெரபி ( Co 60 teletherapy machine ) , லீனியர் எக்சலேரேட்டர் ( Linear accelerator ) விரேக்கி தெரப்பி ( Brachytherapy) ஆகியவற்றை பயன்படுத்தி ,அதி சக்தி வாய்ந்த காமா கதிர்கள் பயன்படுத்த பட்டு புற்றுநோய் கலங்கள் முற்றாக அல்லது பகுதி அளவில் அளிக்கப்படுகின்றன அல்லது புற்றுநோய் கலங்களில் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு பரவல் தடுக்கப் படுகின்றது எனலாம். கதிரியல் மருத்துவ துறையானது நாளுக்கு நாள் பாரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றது.
ஆயினும் பொதுமக்கள் மத்தியில் CT , MRI , Fluoroscopy , Nuclear medicine, Nuclear imagining மற்றும் Radiation Therapy முறைகளில் மூலம்  பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படும் என்ற பிழையான அச்ச நிலை காணப்படுகிறது . ஆயினும் நவீன உலகத்தில் கதிரியலை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்ற போது போதிய அளவு பாதுகாப்பான வழிமுறைகளையே பயன்படுத்துகின்றனர் என்பதை உறுதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். கதிரியல் மூலம் ஏற்படும் பாதிப்புகளை இழிவு நிலைக்கு கொண்டு வருவதற்காகவே நாளுக்கு நாள் புதிய பல கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே தான் இன்றைய நாளில் கதிரியல் மருத்துவ துறையில் பாரிய பரிமாண வளர்ச்சியை நினைவு கூர்ந்து இத்துறை தொடர்பான பிழையான அச்சத்தை நீக்கி ஆரோக்கியமான வாழ்வுக்கு பிராத்தனைகள் செய்வோம் .

சீனாவில் வுகுவான் மாநிலத்தில் Radiotheraphy முறைகளை பயன்படுத்தி Covid 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்ற காட்சிகளும் வைரலாக பரவி இருந்தமை சுட்டிக்காட்ட தக்கது . இவற்றுக்கு மேலதிகமாக கதிரியல் diagnosis  மூலமே சுவாசப் பாதையில் உள்ள அசாதாரண நிலைகளை கண்டறிந்து covid 19 நிலை கண்டறிய படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #கதிரியல்மருத்துவத்துறை #வரலாற்றுச்சிறப்பு #X- Ray #covid 19

ஆக்கம் N.J.Z. Anas ( கதிரியல் சிகிச்சையாளர் ( 2ஆம் வருடம் ) 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More