Home இந்தியாஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

by admin

இந்தியாவின் மத்திய பிரதேசம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ள சேதுபுராபராகிராமத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் என்பவரது 5 வயது மகனான பிரகால்த் கடந்த 4ஆம் திகதி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளாா்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கேட்டுச் சென்ற அக்கம் பக்கத்தினர் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் இருப்பதை கண்டு உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினா் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 கடந்த 3 நாள்களாக  இரவு பகலாக இராணுவ வீரர்கள், மாநில மீட்பு குழுவினர் போராடிய நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தொிவித்துள்ளனா். #மத்தியபிரதேசம் #ஆழ்துளைகிணறு #சிறுவன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More