முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தில் 53 ஆண்டு கால வரலாற்றில் கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பொறியியல் துறைக்கு முதற்தடவையாக மாணவர்கள் தெரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ,போக்குவரத்து வசதிகள் இல்லாத பிரதேசமாக காணப்படுகின்ற மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி பொறியியல் பீடத்துக்கு முதன்முதலாக மாணவர்கள் தெரிவு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
1966 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 53 ஆண்டுகளை கடந்து செல்லும் ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்தகால யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம் பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து இயங்கிய இப்பாடசாலையில் 1993 ஆம் ஆண்டு முதன் முதலாக கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வணிக பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து ஆரம்பிக்கப்பட்ட கணிதப் பிரிவில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி முதற் தடவையாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை இப் பாடசாலையின் வரலாற்றுப் பதிவாகும்.
அன்றாடம் கூலி செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தும் இந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வியை நகர்ப்புற பாடசாலைகளுடன் போட்டி போட்டு கற்பிக்க முடியாத நிலையில் இப்பாடசாலையில் உயர் தர கணித பிரிவு ஆரம்பிக்கப்பட்டு முதல் தடவையாக மாணவர்கள் தோற்றி வெற்றி பெற்றிருப்பது என்பது இப்பாடசாலையின் வளர்ச்சிப் போக்கில் ஒரு படியாக அமைந்துள்ளது.
இப் பாடசாலையிலிருந்து கடந்த வருடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சுலக்சனா விக்னேஸ்வரன் (கணிதப்பிரிவு – பொறியியல் துறை)பாலசிங்கம் விதுசன்(கணிதப்பிரிவு -பொறியியல் துறை)தனோஜா யோகராசா ( கணிதப்பிரிவு – பௌதீக விஞ்ஞானம்)வினோதரன் விதுஜன்( வர்த்தகப்பிரிவு வணிக விஞ்ஞானம்)ரவீந்திரராசா ஆரோன் ( கலைப்பிரிவு – கலைத்துறை)திவ்வியா கனேசராசா (கலைப்பிரிவு – கலைத்துறை)ஜெசிபா பாலேஸ்வரன் ( கலைப்பிரிவு – கலைத்துறை) கார்திகா ஜோதிலிங்கம் ( கலைப்பிரிவு – கலைத்துறை)ஆகிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது #மு/பாண்டியன்குளம்மகாவித்தியாலயம் #முதற்தடவை #பொறியியல்துறை #மாணவர்கள்