உலகம் பிரதான செய்திகள்

கொரோனா – 90 வீத பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது…


முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஏறத்தாள 90 சதவீதமானவர்களுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெளியாகி உள்ளன.

இந்தத் தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் “இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம்,” எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து எந்தப் பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில், இந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அவசர ஒப்புதலை வழங்கும் அனுமதிக்கு இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஏராளமான தடுப்பு மருந்துகள் உள்ளன. ஆனால் விளைவுகள் வெளிப்படுத்திய முதல் தடுப்பு மருந்து இதுவே என குறிப்பிடப்பட்டுள்ளது.


வைரஸின் மரபணு குறியீட்டை செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது போன்ற முழு பரிசோதனை முறையை இது பயன்படுத்துகிறது.


கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கான எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்துகள், மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஒரு பகுதியான டி செல்களை உருவாக்க இந்த தடுப்பு மருந்து உடலை பழக்கப்படுத்தும்.


மூன்று வார இடைவெளியில் இரண்டு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ள நேரிடும். அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டாம் முறை இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு 90 சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது தெரியவந்தது

இந்த வருட முடிவிற்குள் 50 மில்லியன் டோஸ் மருந்துகளை விநியோகிக்க முடியும் என பிஃபிசர் நிறுவனம் நம்புகிறது, மேலும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் டோஸ் மருந்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.


இருப்பினும் இந்த மருந்தைச் சேமித்து வைப்பதில் ஒரு சிறிய சிரமம் உள்ளதாகவும் இந்த மருந்தை மைனஸ் 80 டிகிரி செல்சியஸில்தான் வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதுகுறித்து பிஃபிசர் நிறுவனத்தின் தலைவர் கருத்து வெளியிடுகையில், “இந்த சர்வதேச சுகாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர உலக மக்களுக்கு உதவும் ஒரு முக்கிய பாதையில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்,” என தெரிவித்தார்.


பயோஎன்டெக் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான உகர் சஹின் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல் எனக் கூறியுள்ளார்.


தற்போது வழங்கப்பட்டுள்ள தரவுகள் இறுதியான தரவுகள் அல்ல. இந்த தரவுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 94 தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் செயல்பாடு குறித்த விளக்கம் முழு முடிவுகளும் ஆராயப்பட்ட பிறகு மாற்றம் அடையலாம்.


பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள், கண்காணிப்பாளர்களிடம் இந்த தடுப்பு மருந்தைக் கொண்டு செல்வதற்கான போதிய பாதுகாப்பு தகவல்களை நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பெற்றிருக்கும்.
இருப்பினும் இந்த நிறுவனங்களின் அறிவிப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. “இந்த செய்தி என்னை மனதார மகிழ்ச்சி அடைய செய்தது,” என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஹார்பி தெரிவித்துள்ளார்.

“நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் தற்போது வந்துள்ள செய்தி நிம்மதியைத் தருகிறது. இது ஒரு முக்கிய தருணம்,” எனத் தெரிவிக்கிறார் பீட்டர்.
பிரிட்டனின் பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர், இந்த தடுப்பு மருந்து பரிசோதனை நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்றும் மருந்து தயாரானதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். #கொரோனா #பாதுகாப்பு #தடுப்புமருந்து #ஒக்ஸ்போர்ட்

BBC

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.