
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரான மார்க் எஸ்பரை அப்பதவியில் இருந்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென நீக்கியுள்ளார்.
அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் எனவும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார் எனவும் எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். #அமெரிக்கா #பாதுகாப்புஅமைச்சர் #டிரம்ப் #மார்க்எஸ்பர்
Spread the love
Add Comment