Home உலகம் அசர்பைஜான்-அர்மீனியா யுத்தம் முடிவு

அசர்பைஜான்-அர்மீனியா யுத்தம் முடிவு

by admin

அசர்பைஜான்-அர்மீனியா இடையிலான யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளுக்கு இடையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் திகதி முதல் போர் நடந்து வந்தது. இந்தமோதலில் ராணுவ வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டிருந்தனா்.

இந்த விவகாரத்தில் ரஸ்யா தலையிட்டு ஏற்படுத்திய 2 யுத்தநிறுத்தங்களும் அதன் பின்னர் அமெரிக்காவின் முயற்சியில் உருவான சயுத்த நிறுத்தமும் தோல்வியடைந்திருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ரஸ்யா மீண்டும் தலையிட்டு இரு நாடுகளையும் சமாதானம் செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டியது. அதன் பலனாக ரஸ்ய ஜனாதிபதி புட்டின், அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான் ஆகியோருக்கு இடையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் முழுமையான மற்றும் உறுதியான யும்மநிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 3 நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அனைத்து விரோத நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அசர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை அசர்பைஜான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அர்மீனியா மக்கள் தலைநகர் யெரெவனில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது #அசர்பைஜான் #அர்மீனியா #யுத்தநிறுத்தம் #ஒப்பந்தம் #நாகோர்னோகாராபாக்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More