நல்லூர் கமலாம்பிகா சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(13.11.2020) மாலை கால(இயம) சம்ஹார உற்சவம் இடம்பெற்றது.
மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய நிகழ்ச்சி உற்சவமாக நடாத்தப்பட்டது.
நல்லூர் சிவன் கோயிலில் பல்லாண்டுகளாக வெகுசிறப்பாக நடைபெறும் இந்நிகழ்வு தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக உள்வீதியில் இடம்பெற்றது.
ஆலய பரிபாலகர், அர்ச்சகர்கள், உபயதாரர்கள், போன்றவர்களின் பங்கேற்புடன் நிகழ்ந்த இந்நிகழ்வில் நாட்டின் இன்றைய சூழல் கருதி பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். #நல்லூர் #சிவன்கோவில் #சம்ஹார #உற்சவம்
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6389-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6394-683x1024.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6402-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6404-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6408-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6438-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6446-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6451-1024x683.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2020/11/DSC6453-1024x683.jpg)
படங்கள் – ஐ.சிவசாந்தன்