இலங்கை பிரதான செய்திகள்

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தால் வலைகள் எரிந்து நாசம்

கடலில் மிதந்து வந்த கொள்கலனில் இருந்த திரவத்தை படகினுள் ஊற்றியமையால் , படகும் , படகிலிருந்த வலைகளும் எரிந்து நாசமாகியுள்ளன.


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இருந்து நேற்றைய தினம் இரு மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.


அதன் போது கடலில் கொள்கலன் (பிளாஸ்ரிக் கான்) ஒன்று மிதந்து வந்துள்ளது. அதனை மீனவர்கள் இருவரும் எடுத்து , திறந்து பார்த்த போது , அதனுள் திரவம் காணப்பட்டுள்ளது. அதனை அவர்கள் படகினுள் ஊற்றியுள்ளார்கள். உடனே படகும் , படகில் இருந்த வலைகளும் தீப்பற்றி எரிய தொடங்கின. விரைந்து செயற்பட்ட மீனவர்கள் இருவரும் கடலினுள் குதித்து , கடல் நீரினால் தீயை அணைக்க முற்பட்டு , போராட்டத்தின் மத்தியில் தீயை அணைத்தனர்.


இருந்த போதிலும் , படகினுள் இருந்த சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. படகும் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது #மர்மதிரவம் #வலைகள் #படகு #வடமராட்சி #மீனவர்கள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.