இலங்கை தொடர்ச்சியாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடா்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகம் என்பது ஒரே திசையை நோக்கி பயணிப்பது அல்ல எனவும் இலங்கியில் தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளால் இலங்கை மற்றும் ஐரோப்பாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்த இறக்குமதி கட்டுபாடுகளானது, இலங்கை பிராந்திய பொருளாதார மையமாக மாறுவதற்கு தடையாக இருப்பதாகவும் தொடர்ச்சியான இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. #இலங்கை #இறக்குமதிகட்டுப்பாடுகள் #ஐரோப்பியஒன்றியம் #கவலை #eu