இலங்கையில் நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நால்வா் உயிாிழந்துள்ள நிலையில் நிலையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 15ஐச் சேர்ந்த, 27 வயதான யுவதி ஒருவரும் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயதான ஆணொருவரும் களுத்துறை மாவட்டத்தினைச் சோ்ந்த 59 வயதான பெண் மற்றும் 86 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை