163
கண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வது உசதமானது இல்லையென, பெற்றோர் தொடர்ச்சியாக பாடசாலை குழுக்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளையும் நாளை முதல் மூடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென அவா் தொிவித்துள்ளாா். #கண்டி #பாடசாலைகள் #ஆளுநர் #கொரோனா
Spread the love