இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

கொரோனாவும், வடகடலும், கடற்கலங்கலும், கடற் தொழிலாளரும், அவலங்களும்…

ந.லோகதயாளன்.

இலங்கையின் மொத்தக் கடற்பரப்பின் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிக  கடல் வட  மாகாணத்தில் கானப்படும் நிலையில் கொரோனா காரணமாக கடல் கலங்கள் கரையிலேயே நிறுத்தி வைக்கும் அவலத்திற்கு வடக்கு மாகாண மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மொத்தக் கடற் பரப்பு   1,760 கிலோ மீற்றர் நீளம்  கொண்டது. இதில்   வடக்கு மாகாணத்தில் மட்டும்  656 கிலோ மீற்றர் நீள கடல் உள்ளது. இதில்  அதிக பட்சமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 292 கி.மீற்றர் நீள கடல் உள்ளதோடு, மன்னாரில் 163 கி.மீ. நீளம் கடல் உள்ளதோடு , கிளிநொச்சியில் 125 கி.மீற்றரும், முல்லைத்தீவில் 76 கி.மீற்றருமாகவே  வடக்கு மாகாணத்தில்  656 கி.மீற்றர் நீள கடல் உள்ளது.

இந்த மாகாணத்தின்  4 கடல் மாவட்டங்களில்  மட்டும் 35 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை நம்பி வாழ்கின்றனர். அதாவது யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் குடும்பங்களும் , மன்னாரில் 7 ஆயிரத்து 500 குடும்பங்களும் , 4,835 கடற்கலங்கள் மூலமும் 115 கரை வலையிலுமாக தினமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரையில் உற்பத்தி கிடைத்தபோதும் தற்போது 60;ஆயிரத்தை தாண்ட முடியவில்லை எனவும் தினமும் 30ற்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது 6 அல்லது 7 வாகனங்களே செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவில் 3,987 குடும்பங்களிடம்  1,340 படகுகள் கரை வலை என தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கிலோ உற்பத்தி பெறப்பட்டபோதும் தற்போது 25 ஆயிரம் கிலோவை கூட பெறமுடியவில்லை எனவும் தினந்தோறும் இரு வாகனம் கொழும்புக்கு சென்றதோடு தற்போது செல்வதே கிடையாது என மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் 3 ஆயிரத்து 500 வரையான  குடும்பங்களுமாகவே 35:ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதப்படைந்துள்ளன.

இவ்வாறு வாழும் இந்த 35 ஆயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடந்த 6 மாதங்களாக குறைவடைந்து செல்வதோடு இரு மாதங்களாக அதிகத் பாதிப்படைந்துள்ளது. அதாவது கொரோனா காரணமாக தலைநகர் முடக்கம் அதனால் ஏற்றுமதி கிடையாது , மாகாணங்களிற்கு இடையேயான போக்குவரத்து அச்சம், என்பனவே பிரதான காரணமாக கூறப்படுகின்றது.

இவ்வாறு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைகள் தொடர்பில்
வடமராட்சி சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம்  கருத்து தெரிவிக்கையில்,

வடமராட்சி சமாசத்தின் கீழ் 14 சங்கங்களைச் சேர்ந்த 3,732 மீனவக் குடும்பங்கள் கடல் தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக 2,500ற்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இவற்றின் மூலம் கொரோனா தாக்கத்திற்கு முன்பு நாள் ஒன்றிற்கு 7 ஆயிரம் கிலோ வரையான மீன் உற்பத்தி பெறப்பட்டது. அதேநேரம் 7 அல்லது 8 கூளர் மீன் தெற்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏற்றுமதியும் இடம்பெற்றது. இதனால் ஓரளவு தடையற்ற வருமானத்தை தொழிலாளர்கள் பெற்றனர்.

ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஏற்றுமதி இல்லை . அதனால் போதிய சந்தை வாய்ப்பு இன்மையால் தொழிலாளர்கள் கடலிற்கு செல்வதில்லை . இதனால் நாள் ஒன்றிற்கு ஆயிரம் கிலோ உற்பத்தியளவிலேயே கிடைக்கும் சந்தர்ப்பத்திலும் 800 ரூபா விற்ற மீனை 300 ரூபாவிற்கும் சந்தைப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக படகுகளில் தினக் கூலிக்கு சென்ற மீனவர்கள் மேசன் வேலைக்கும் , றோட்டு வேலைக்கும் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. என்றார்.

,இதேவிடயத்தினையே வட மாகாண சுதந்திர கடற்றொழிலாளர் மையத்தின் தலைவர் தவச்செல்வனும் வழியுறுத்தியதோடு இந்திய மீனவர்களின் ஊடுரிவலும் இவற்றிற்கு காரணம் என்னார்.

இலங்கையில் இருந்து 74 நிறுவனங்கள் கடல் உற்பத்தியை ஏற்றுமதி செய்தாளும் இதில் ஒருவர் மட்டுமே தமிழராகவும் உள்ளார். ( அமலதாஸ் ) 

#கொரோனா #வடகடல் #கடற்கலங்கல் #கடற் #தொழிலாளர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link