கேபிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை எம்மால் கட்டுப்படுத்தவோ அவை தொடர்பில் எதுவித வரிகளையோ விதிக்கவோ முடியாது என கல்முனை மாநகர சபை தெரிவித்தது.
கல்முனை மாநகர சபையின் 32 ஆவது அமர்வு புதன்கிழமை மாலை சபா மண்டபத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
கல்முனை மாநகர சபை எல்லைப்பகுதியில் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதாகவும் அதற்கான வாடகை பெறப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து கருத்துரைத்த கல்முனை மாநகர சபை முதல்வர் மாநகர சபை எல்லைக்குள் பொருத்தப்பட்டிருந்த கேபிள் இணைப்புகள் உரிய நடைமுறைகளுடன் இயங்கி வருகின்றன.சட்டவிரோதமாக கேபிள் இணைப்புகள் இங்கு இல்லை.சட்டவிரோத கேபிள் இணைப்புகள் என கூறி அதை கடந்த காலங்களில் அகற்றுவதற்கு யாழ். மாநகர சபையும் நடவடிக்கை எடுத்திருந்தது.எனினும் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ். மாநகர மேயர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.தனியார் கேபிள் இணைப்புகள் தொலைத் தொடர்பு அணைக்குழுவிற்கு வருடாந்தம் கோடிக்கணக்கான கட்டணங்களை செலுத்தி உரிமங்களை பெற்று செயற்படுகின்றன.இதனால் மாநகர சபையின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக கம்பங்கள் நடப்பட்டுள்ளதை இங்கு கூற முடியாது .கடந்த காலங்களில் கூட கேபிள் இணைப்பு கம்பங்களை வாடகை தரப்படாமல் சட்டவிரோதமாக நடப்படுவதாக யாழ் மாநகர சபை தெரிவித்து வழங்கு தாக்கலில் ஈடுபட்ட பின்னர் சமரசத்திற்கு வந்தது.
மேலும் இணைப்பிற்காக அந்த நிறுவனம் நாட்டுகின்ற கம்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வருடம் தோறும் 300 ரூபா வாடகையாக செலுத்துகின்றனர்.மேற்குறித்த நிறுவனங்களிடம் வரி விதிப்பதென்றால் சபையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.அதற்கு எமக்கு அதிகாரம் இருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.மாநகர சபை சட்ட வரையறைக்குள் தான் நாம் வரிகளை விதிக்க முடியும் என்றார். #கேபிள்இணைப்புகள் #தொலைக்காட்சிஉரிமம் #கட்டுப்படுத்த #சட்டவிரோத