நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான இராஜாங்க அமைச்சு புதிய இராஜாங்க அமைச்சாகும்.
திருமதி பெர்னாண்டோபுல்லே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது #கொவிட்நோய்த்தடுப்பு #இராஜாங்கஅமைச்சர் #சுதர்ஷனிபெர்னாண்டோபுல்லே #நியமனம்