Home இலங்கை4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்

4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல் மற்றும் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகவல்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டாா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 26ஆம் திகதி ஏறாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், நீதிமன்ற அனுமதியுடன் ஏறாவூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னா் நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்ட போதே இவ்வாறு டிசம்பர் 11ஆம் திகதி வரைவிளக்கறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளாா்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவா்கள் சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #கைது #விளக்கமறியல் #தமிழீழவிடுதலைப்புலிகள் #பிரபாகரன் #மாவீரர்தினம் #முகப்புத்தகம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More