இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.மாநகர சபை வரவு செலவு திட்டம் தோல்வி

யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

அதன் பிரகாரம் ஆதரவாக 19 வாக்குகள் அளிக்கப்பட்டன. 
அதேவேளை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன எதிராக வாக்களித்தனர். அதன் பிரகாரம் எதிராக 24 வாக்குகள் அளிக்கப்பட்டன #வரவுசெலவுதிட்டம் #யாழ்மாநகரசபை #தோல்வி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.