மாத்தளை மேயா் டல்ஜித் அலுவிஹார அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். அது தொடா்பான விசேட வா்த்தமானி அறிவித்தல் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் வெளியிடப்பட்டுள்ளது.
மாத்தளை மேயர் பதவியில் தொடா்வதற்கு டல்ஜித் அலுவிஹாரவுக்கு மத்திய மாகாண ஆளுநரால் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில் டல்ஜித் அலுவிஹாரேவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கைக்கு அமைய, நேற்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டல்ஜித் அலுவிஹாரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபை உறுப்பினர் குழுவினால் மேயர் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தவறிழைத்தமைக்கான போதியளவு சாட்சிகள் உள்ளமையால் அவரை பதவி நீக்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். #மாத்தளைமேயா் #டல்ஜித்அலுவிஹார #பதவிநீக்கப்பட்டுள்ளாா் #வா்த்தமானி