ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் நாவற்குழி 300 வீட்டு திட்ட மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
நாவற்குழி பகுதியில் உள்ள 300 வீட்டு திட்ட பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
குறித்த கால்வாய்களை மூடி சிலர் தமது வீடுகளுக்கு பாதைகளை அமைத்தமையால் வெள்ள நீர் வடிந்தோட முடியாது தமது பகுதிகளில் தேங்கி நிற்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
அது தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் எவரும் தமது பகுதிக்கு வருகை தந்து வெள்ள நீர் வடிந்தோட வழி யமைத்து தரவில்லை எனவும் குற்றசாட்டினார்கள். #பொறுப்பற்றசெயல் #வெள்ளத்தில் #நாவற்குழி #கால்வாய்கள்