கொரோனா வைரசுக்கெதிரான மிகப்பெரிய தடுப்பூசி முகாமை பிாித்தானியா அரசு இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி ஒருவா் முதல் நபராக பைஸர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளாா்.
பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்ததனையடுத்து பிாித்தானியாவின் சுகாதாரத்துறை, மருந்து மற்றும் சுகாதாரத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அரசுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை பிரித்தானியாவில் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்படும் என றெிவிக்கப்பட்டிருந்தது.
முதல்கட்டமாக 80 வயதுக்கு அதிகமான முதியோர், முன்களப்பணியாளர்கள், வீடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில் இதற்காக 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி இன்று முதல் நபராக வடக்கு அயர்லாந்தில் உள்ள என்னிஸ்கிளன் எனும் நகரைச் சேர்ந்த 90வயது மூதாட்டி மார்கரெட் கீனன் என்பவருக்கு பைஸர் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொவன்ட்ரி நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு இன்று காலை 6.31 மணிக்கு வந்த கீனனுக்கு செவிலியர் மே பார்ஸன் தடுப்பூசி செலுத்தினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து மூதாட்டி கீனன் கூறுகையில் “ எனக்கு கிடைத்த சிறப்புரிமயை, மரியாதையாக கருதுகிறேன்.என்னுடைய பிறந்தநாளுக்கு முன்கூட்டியே பரிசுகிடைத்துள்ளது. ஓர் ஆண்டுக்குப்பின், வரும் புத்தாண்டுக்கு என்னுடைய நண்பர்கள், குடும்பத்தாருடன் அதிகமான நேரத்தைச் செலவிட முடியும்.
எனக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியர், மருத்துவமனைக்கு நன்றி. 90 வயதான நானே தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் ஒவ்வொருவரும் செலுத்திக்கொள்ளுங்கள் என்பதே எனது அறிவுரை” எனத் தெரிவித்துள்ளாா். #பிாித்தானியா #கொரோனா #தடுப்பூசி #மூதாட்டி #பைஸர்