உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்படட பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
உடுவில் பிரதேச செயலக பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பர்,
மருதனார்மடம் சந்தை அதனைச்சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது. தெல்லிப்பளை மற்றும் உடுவில் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது என குறிப்பிட பட்டுள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை முடக்க படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது நாளை திங்கட்கிழமை முதல் முடக்கம் தளர்த்த படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #உடுவில் #முடக்கம் #தளர்த்தப்பட்டது #மருதனாரமடம் #சந்தை