1.3K
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை , காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்ட போது, 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
அதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Spread the love

