ஜப்பானில் ருவிட்டர் கொலையாளி என்று அழைக்கப்பட்டவருக்கு அந்தநாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.
தகாஹிரோ சிராய்ஷி என்னும் குறித்த 29 வயது இளைஞர், 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டிருந்தாா்
ருவிட்டர் கொலையாளி என ஜப்பானில் அழைக்கப்பட்டு வந்த இவா் 2017-ம் ஆண்டு ருவிட்டா் கணக்கினை ஆரம்பித்து அதில் தனது சுய விவரத்தில் “ உண்மையில் வேதனையில் இருப்பவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். தயவுசெய்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு தகவல் அனுப்புங்கள்” என தொிவித்திருந்தாா்.
இதனடிப்படையில் அவரை தொடர்புகொண்ட 8 பெண்களை அவர் கொலை செய்துள்ளார் என்ற போதிலும் எப்படி கொலை செய்தார் என்னும் விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் ஆண் ஒருவா் தனது காதலியின் இருப்பிடம் தொடர்பாக மோதிக்கொண்டதையடுத்து அவரையும் கொலை செய்துள்ளார்.
ஒரு இளம்பெண் காணாமல் போனநிலையில் அவரை தேடியபோதுதான் சிராய்ஷி குறித்த விவரம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஜூமா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு காவல்துறையினா் சென்றபோதுதுண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல் பாகங்களை கண்டெடுத்ததனையடுத்து சிராய்ஷி கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு விசாரணை, டோக்கியோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் சிராய்ஷிக்கு நேற்று மரண தண்டனையை டோக்கியோ நீதிமன்ற நீதிபதி வழங்கினார். #ஜப்பான் #ருவிட்டர்_கொலையாளி #மரணதண்டனை