ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை அமானா வங்கி சுற்றாடலில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.
காலை தொழுகையின் பிற்பாடு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் முடிவுறுத்தப்பட்டது.
இதில் பல அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.
ஜனாஸாவை அடக்க அனுமதி தா, நல்லடக்கம் எங்கள் அடிப்படை உரிமை அதை மறுப்பது சர்வாதிகாரம், விஞ்ஞானத்தை ஏற்று கொள் இனவாதத்தை கை விடு, இனவாதிகள் அல்ல நிபுணர்கள் சொல்வதை கேட்டு நட , இனவாதமாக இல்லாமல் விஞ்ஞான ரீதியாக செயற்படு போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. #கல்முனை #கவனயீர்ப்புபோராட்டம் #ஜனாஸாஎரிப்பு