பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளதனையடுத்து 27 நாடுகளில்ஒரே நாளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள பைசர் தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்ததனையடுத்து பிாித்தானியா , அமெரிக்கா போன்ற நாடுகள் அந்ததடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் நேற்றையதினம் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் ஆலோசனை நடத்தியது.
இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி டிசம்பர் 27-ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது #பைசர் #கொரோனா #தடுப்பூசி #ஐரோப்பியஒன்றியம் #ஒப்புதல்