அரச காணிக்குள் அத்துமீறி சட்டத்துக்குப் புறம்பாக உள்நுழைந்தமை மற்றும் அரசுக்குச் சொந்தமான சவுக்கு மரத்தை வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 பட்டா வாகனங்களும் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று மாலை வடமராட்சி கிழக்கு, மணற்காடு பிரதேசத்தில் இடம்பெற்றது. சந்தேக நபர்கள் மானிப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் , கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிப்பு வேலைகளுக்காக சவுக்கு வெட்டியதாக விசாரணைகளில் தெரிவித்தார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர் #கிறிஸ்மஸ் #அலங்காரத்திற்காக #சவுக்கு #கைது #மணற்காடு