344
சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சுழிபுரம் சங்கக்கடை வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர் அணிந்திருந்த அரை பவுண் சங்கிலி , 300 அமெரிக்க டொலர், 100 அவுஸ்ரேலிய டொலா்கள் மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய இருவர் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். #சுழிபுரம் #கொள்ளை #கொள்ளையர்களின் #தாக்குதல்
Spread the love