கடந்த செவ்வாய்க்கிழமை அருவியாற்றுப் பாலத்தின் அடியில் வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பின் ஆற்றில் குளிக்க சென்ற போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகாின் சடலம் இன்று(31) வியாழக்கிழமை காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.
நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #காணாமல்போன #கிராமஅலுவலகர் #சடலமாக #மீட்பு