இலக்கியம் பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

தமிழ்த்தாய்க்குப் புது மணிமகுடம் ~ தமிழுக்குப் பணி செய்யும் அழைப்பு ~

தமிழ்த்தாய் அந்தாதி இசை வடிவம் பெற நிதி உதவுங்கள்!

கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த தமிழ்த்தாய் அந்தாதிப் பாடல்களை இசைவடிவில் கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவ சஜிதரன் (Thava Sajitharan  Organiser Harrow, Greater London, United Kingdom) நிதி உதவி கோரியுள்ளார். விரும்பியவர்கள் உங்கள் பங்களிப்பை செய்யலாம்.

மொழி ஓர் இனத்தின் ஆன்ம அடையாளம். தமிழினத்தின் இருப்புக்கு மொழி சார்ந்த, வீச்சுரம் கொண்ட செயற்பாடுகள் தொடர்ந்து  இடம்பெறுவது அவசியமாகும்.  அப்படியான இலக்கை நோக்கிய ஒரு வேலைத்திட்டம் இது.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாகச் செறிவான சொற்களில், அணி அழகு துலங்கும்படி பாவலர் தவ சஜிதரன்  புனைந்திருக்கும் போற்றிப்பாடல் தமிழ்த்தாய் அந்தாதி  ஆகும் (மேலே YouTube காணொளி காண்க).  கேட்கும்தோறும் மனதை ஈர்க்கும் மந்திரத்தன்மை கொண்ட ஒரு படைப்பு.

பேராசிரியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் முதலானோர் இதனைப் பெரிதும் விதந்து பாராட்டியிருக்கிறார்கள். (தொடர்புடைய பதிவுகள்: https://tinyurl.com/y63445yy)

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழில் அமைந்த அந்தாதி இப்போது இசையாகவும் நாடகமாகவும் முகிழ இருக்கிறது.  இலண்டன் மொழியகம்  இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

முதலாவது காணொளி உயர் தரத்துடன் வெளிவந்து பெருவரவேற்பைப் பெற்றுள்ளது –  பார்வையாளர்கள் இந்தப் படைப்பின் சிறப்பை எவ்விதம் போற்றிப் பேசியிருக்கிறார்கள் என்பதை YouTube comments வழியாகக் காணலாம் (இணைப்பு மேலே காண்க).

இதே தரத்தில் மீதம் இருக்கும் அந்தாதிப் பாடல்களுக்கான காணொளிகளும் வெளிவருவதற்கு உங்கள் மேலான உதவி / கொடை தேவைப்படுகிறது.

https://www.gofundme.com/f/andhadhi?utm_medium=copy_link&utm_source=customer&utm_campaign=p_lico+share-sheet

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.