Home இலங்கை நடனத்தினூடாக இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு! பு.ரதிகலா.

நடனத்தினூடாக இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு! பு.ரதிகலா.

by admin


மூன்று பல்கலைக்கழகங்களுக்கிடையில், நடனத்தினூடாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கான களப்பயிற்சியும், கருத்தரங்கும் – பு.ரதிகலா

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் எம் அனைவரையும் முடக்கி வீட்டினுள் வைத்திருந்தாலும் நாமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஏதோவொரு செயலினால் முனையுறுத்தி நிற்கின்றோம். கொடிய வைரஸான கொரோனாவினால் அனைத்து நடவடிக்கைகளுள் கல்வியும் முடங்கிப் போயிருக்கும் இச்சூழ்நிலையில் இவ் நவீன யுகத்தில் நாமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றோம். அந்தவகையில் 15.11.2020 தொடக்கம் 18.11.2020 வரை நான்கு நாட்கள் இணையவழி மூலம் களப்பயிற்சியும், கருத்தரங்கும் ‘யுளாடநல குயசபழெடi’ தலைமையில் நடைபெற்றது.


ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைப்பது கலை என்பதில் ஐயமில்லை. தமிழர், சிங்களவர் என எவ்விதப் பாகுபாடுமின்றி நான்கு நாள் இக்கருத்தரங்கு இடம்பெற்றது. பெரதேனியா பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்ற மூன்று பல்கலைக்கழகங்களையும் உள்வாங்கி களப்பயிற்சியும், கருத்தரங்கும் நடைபெற்றது. இக்களப்பயிற்சியின் மூலம் மூன்று பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடனத்தினூடாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், நட்புறவையும் பெற வழிவகை செய்தது.


இச்சூழ்நிலையினால் வௌ;வேறு மாவட்டங்களில், வௌ;வேறு பிரதேசங்களில் இருந்து இணையவழி மூலம் கலந்து கொண்டோம். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட விரிவுரையாளர்களும் இக்கருத்தரங்கில் இணைந்து செயற்பட்டார்கள். வீட்டிலிருந்தும் எனது செயற்பாட்டை இணையவழி மூலம் மேற்கொண்டதனால் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன்.


கருத்தரங்கும், களப்பயிற்சியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளின் மூலம் இடம்பெற்றது. இக்களப்பயிற்சியில் எனது முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்க இலயவில்லை. இதனால் பெரிதும் கவலையடைகின்றேன். காரணம் எனது கிராமத்தில் இணையவழியில் தொடர்பு கொள்வதற்கு ‘நேவறழசம’ பாரிய பிரச்சினையாக அமைந்தது. இதனால் எனது தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதும், இணைக்கப்படுவதுமாக இருந்தது.

காணொளியில் கூட என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கருத்தரங்கில் சொல்லப்படும் சிறு செயற்பாடுகளையும் நானும் செய்து கொண்டேன். பல்கலைக்கழகங்களில் இதுவரை நடைபெற்ற கருத்தரங்கில் நேரடியான பங்களிப்பில் கலந்து கொண்டேன் ஆனால் இக்கருத்தரங்கானது இணையவழி மூலம் என்பதனால் இதில் ஒரு புதுவித அறிமுகமும், அனுபவமும் கிடைத்தது.

ஒரு குடையின் கீழ் எம் அனைவரையும் கொண்டு வருவது போல யாரென்றே முகம் தெரியாத அனைவரையும் களப்பயிற்சி மூலம் ;கலையானது ஒன்று சேர்த்தது. களப்பயிற்சியின் போது மூன்று பல்கலைக்கழக மாணவர்களும் தமிழர்களின் பாரம்பரியங்களையும், சிங்களவரின் பாரம்பரியங்களையும் காணொளி மூலம் செய்து காட்டினார்கள். அத்தோடு எமது உடலைப் பயன்படுத்தி அசைவுகளை கொண்டு வருதலுடன் இதில் ஒவ்வொருவரும் தம்முடைய புதிதளிப்பு மூலமும் அசைவுகளைக் கொண்டு வந்தனர். எம்மிடம் உள்ள பொருட்களைக் கொண்டு ஓசையை எழுப்புதல் போன்ற செயல்களையும் செய்தோம்.


கருத்தரங்கில் முதலாம் நாள் (15.11.2020) யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து செயற்பட்டனர். காத்தவராயன் கூத்து, வசந்தன் கூத்து, வடமோடி, தென்மோடி போன்ற கூத்துகளில் உள்ள ஒரு சில ஆட்டக் கோலங்களைச் செய்து காட்டினார்கள்.


இரண்டாம் நாள் (16.11.2020) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து வடமோடி, தென்மோடி, இராவணேசன் போன்ற கூத்துகளில் இருந்து ஒரு சில ஆட்டக்கோலங்களையும், அசைவுகளையும் மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து செய்து காட்டினார்கள். ‘ஊழவெநஅpழசயசல னுயnஉந’ அசைவுகள் நான்காம் வருட மாணவி நிவேதிகா அவர்களினால் செய்து காட்டப்பட்டது.

அண்ணாவியாரின் மத்தள இசையுடனும், பாரம்பரியமான உள்ளூர் இசைக்கருவியான உடுக்கும் அடித்துக் காட்டப்பட்டது. தலையில் கிரீடம், கையில் வாள் என்பவற்றைக் கொண்டும் ஆற்றுகை செய்து காட்டப்பட்டது. தொடர்ந்து ‘நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்…’ எனும் பாடலானது தமிழில் கலாநிதி.சி.ஜெய்சங்கர் அவர்களினாலும், சிங்களத்தில் நான்காம் வருட மாணவி புஸ்பலதா அவர்களினாலும் பாடப்பட்டது.


மூன்றாம் நாள் (17.11.2020) பெரதேனியா மாணவர்களும், விரிவுரையாளரும் அவர்களுடைய பாரம்பரியக் கலைகளை செய்து காட்டியும், விளக்கமும் தந்தனர். சிங்கள சுதேசிகளினுடைய கலைகளான கராமடுவ சடங்கு, கொகம்பங்கரிய, கோலம், கண்டிய நடனம் பற்றிய விளக்கமும் தரப்பட்டது. சிங்களவர்களினுடைய கலாசார ஆற்றுகையின் போது மங்கல வாத்தியம் இசைக்கப்படுவதால் தீய சக்திகளும் அவ்விடம் விட்டு அகழும், அப்போது இறைவனின் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகமும் அவர்களிடையே உண்டென குறிப்பிட்டனர். இதுவரையான காலங்களில் சிங்களப் பாரம்பரிய கலைகள் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன். இக்கருத்தரங்கினால் ஓரளவு சிங்களப் பாரம்பரிய கலைகள் பற்றியும், கண்டிய நடனம் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.


நான்காம் நாள் (18.11.2020) மூன்று பல்கலைகழக மாணவர்களாகிய நாம் அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தியும், மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு, களப்பயிற்சி பற்றியும் கலந்து பேசிக் கொண்டோம். ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களையும் முன்வைத்தனர். ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்தனர். இந்நாளில் மாணவர்களாகிய நாம் முழுமையான செயற்பாட்டாளராகவும் காணப்பட்டோம். பிற்பாடு அனைத்து மாணவர்களும் இணைந்தும், பின்னர் மூன்று குழுக்களாகப் பிர்ந்தும் ஒவ்வொரு ஆற்றுகை வடிவத்தையும் நாமே வடிவமைத்து குறுகிய நேரத்தில் இசையுடன் ஆற்றுகை செய்தோம்.

இவ் மூன்று பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பட்டு கலந்து பேசி வௌ;வேறு மொழியாயினும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட்டோம். இக்களப்பயிற்சியானது இளைய தலைமுறைக்கு வித்தியாசமான அனுபவத்தையும், நல்லிணக்கத்தையும் கொடுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இச்செயற்பாடானது நல்லிணக்கத்தையும், ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டையும் இலங்கையிலுள்ள பாரம்பரிய சில கூறுகளை எடுத்து, பயிற்சி அளித்து அதைப் பார்க்கக் கூடியதாகவும், அதுசார்ந்த கலந்துரையாடலாகவும் நான்காம் நாள் அமைந்தது. எம் அனைவருக்கும் இதுவொரு ஆக்கபூர்வமான செயற்பாடாகவும் காணப்படுகின்றது என்பதில் ஐயமில்லை.


மூன்று பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடனத்தினூடாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கான களப்பயிற்சியாகவும், கருத்தரங்காகவும் அமைந்தது. ஒவ்வொரு நடன அசைவும் எம் உடல்நலத்திற்கு ஏற்றதாகவே இருந்தது. களப்பயிற்சியின் போது ஒவ்வொருவரும் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து அவர்களின் கருத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்தது. அனைவரும் உட்சாகத்துடன் செயற்பட வழிவகையும் செய்தது. இவ்வாறான களப்பயிற்சியும், கருத்தரங்கும் அனைத்து மதங்களுக்குமிடையில் நடைபெறுமானால் நாட்டில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. அனைவரும் ஒற்றுமையாக வாழ வழிவகை செய்யும்.


இவ்வாறு இணையவழி மூலம் நடைபெற்ற இக்கருத்தரங்கானது நேரடியாக நடைபெற்று இருப்பின் இன்னும் எம்மால் பல்வேறு அனுபவங்களையும் பெற்று இருக்க முடியும். இருப்பினும் இக்கால சூழ்நிலையிலும் கருத்தரங்கானது நடைபெற்றதே பாரிய விடயமாக அமைகின்றது. இக்கருத்தரங்கையும், களப்பயிற்சியையும் ஒழுங்குபடுத்தியமைக்கு நன்றிகள் பலகோடி, இக்கருத்தரங்கானது இன்றுடன் நின்று விடாமலும், இதில் பங்கேற்ற அனைவரும் தொடர்ந்து செயற்பட வேண்டும் எனவும் விரும்புகிறேன்.


களப்பயிற்சியும், கருத்தரங்கும் நான்கு நாள் நடைபெற்று முடிந்ததன் பின்பு 05.12.2020 அன்றைய நாள் மீண்டும் இணையவழி மூலம் இணைந்து கொண்டோம். ஆற்றுகைகளில் ஈடுபட்டவர்களுடன் ஏனைய இடங்களிலிருந்து இன்னும் சிலர் இணைந்து கொண்டனர். ஆரம்பமே ‘நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்…’ எனும் பாடலுடன் ஆரம்பமாகியது. அன்றைய நாளின் போது மூன்று பல்கலைக்கழகங்களிலிருந்தும் தங்களுடைய அனுபவம் பகிரப்பட்டது. அத்துடன் இதற்கான வலைப்பக்கமும் உருவாக்கப்பட்டு அதில் எவ்வாறான விடயங்கள் இடம்பெற வேண்டுமெனவும் கலந்துரையாடப்பட்டது. நான்கு நாட்களும் இடம்பெற்ற களப்பயிற்சியையும், கருத்தரங்கையும் காணொளியாகத் தொகுத்துப் காண்பிக்கப்பட்டது. அன்றைய நாளில் கலந்து கொண்ட ஏனையவர்களும் தமது அனுபவத்தையும், பாராட்டுடன் இணைந்தே வினாக்களும் முன்வைக்கப்பட்டது.

இக்களப்பயிற்சியானது மேலதிகமாக இன்னும் 5 நாட்கள் நடைபெற்றால் என்ன செய்வீர்கள்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலும் அளிக்கப்பட்டது. இறுதியாகவும் ‘நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்…’ எனும் பாடலுடன் இணையவழி மூலமான கலந்துரையாடல் நிறைவுபெற்றது. #பல்கலைக்கழகங்களுக்கிடையில் #இனங்களுக்கிடையிலான #புரிந்துணர்வை #களப்பயிற்சி #கருத்தரங்கு, பு_ரதிகலா

பு.ரதிகலா,
கிழக்குப் பல்கலைக்கழகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More