மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு, 2ஆம் குறிச்சி, நாவலர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமியே நேற்று (10) மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென களுவாஞ்சிகுடி காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரியும் நிலையில், சிறுமி அவரது சிறிய தாயின் வீட்டில் வசித்துவந்தாா்.. இந்தநிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அவரது அம்மம்மாவின் வீட்டில் இருந்தபோது குறித்த சிறுமி தாக்கப்பட்டதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், அப்பகுதிக்கான கிராம சேவகரால் சிறுமி மீட்கப்பட்டு, பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வைத்தியசாலையில் இருந்த சிறுமியை, சிறுமியின் சிறிய தாயார், நேற்று முன்தினம் சனிக்கிழமை (09) தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற நிலையில், நேற்று சிறுமி, குறித்த சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள களுவாஞ்சிகுடி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா். #சிறுமி #சடலமாக #மீட்பு #மட்டக்களப்பு #சிறிய_தாயார்