இலங்கையில் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொிவித்துள்ள அவா் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
இதனை தவிர கொவெக்ஸ் சலுகை ஊடாக, கொரோனா எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியும் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #கொரோனாதடுப்பூசி #இலவசமாக #சுதர்ஷனி_பெர்னாண்டோபுள்ளே #ஒக்ஸ்போர்ட்_அஸ்ட்ராஸெனெக்கா