உலகம் பிரதான செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து – 43 புலம்பெயா்ந்தோா் பலி

லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 43 புலம்பெயா்ந்தோா் உயிாிழந்துள்ளதுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனா்.

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள கடற்கரை நகரான ‌ஷவையாயிலிருந்து படகில் அதிகளவில் புலம்பெயா்ந்தோரை ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்தமையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் 43 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நிலையில் 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்

அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றதனால் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு கப்பல்கள் செல்ல முடியாத நிலையினாலேயே இந்த படகு விபத்தில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா் என அகதிகள் நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். #படகு #விபத்து #புலம்பெயா்ந்தோா் #பலி #லிபியா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.