158
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை வலியுறுத்தி, நீர்கொழும்பில் இன்று (23.01.21) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைதியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, கலைஞர்கள், இரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
Spread the love