
யாழ் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2021க்கான வரவுசெலவுத்திட்டம் வெற்றிபெற்றுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் வழங்கப்பட்்துடன் 15 பேர் நடுநிலை வகித்துள்ளனர்.
இதன்மூலம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தற்போதைய ஆட்சி 2021ஆம் ஆண்டில் நீடிக்கும்.
இன்றைய வாக்கெடுப்பின் போது முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்துள்ளனர்.
மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது #யாழ்_மாநகரசபை #வரவுசெலவுத்திட்டம் #வெற்றி #மணிவண்ணன்
Spread the love
Add Comment