கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஒலி மற்றும் காட்சி அலகு (Audio & visual unit) நேற்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதிநிதி ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
அந்நிகழ்வில் , பேராசிரியர் ரஞ்சன் ஹெட்டி அராச்சி, பேராசிரியர் தர்ம கீர்த்தி ஸ்ரீ ரஞ்சன் மற்றும் விரிவுரையாளர்கள், அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #ஜப்பான் #நிதியுதவி #கொழும்பு_பல்கலைக்கழகம்
1 comment
Mallakam and Chavakacheri courts dismiss but point pedru court accepts—same claim. How is it?