உத்தரகாண்டில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி எனும் பனியாறு உருகியதையடுத்து அலக்நந்தா நதிப்பாலம் சேதமடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் எனவும் இதனால் சுமாா் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரிஷிகங்கா மின் திட்டத்தில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காணவில்லை என மாநில பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது
இதனையடுத்து ங்கை நதிக்கரைகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் படையின் ஐந்து குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #உத்தரகாண்டில் #பனிச்சரிவு #வெள்ளப்பெருக்கு #பலி