i.
அன்பும் அறமும் வாழ்வாகும்
அன்பும் அறமும் மொழியாகும்
உலகில் மனிதர்கள் எழுக
உயிர்கள் எல்லாம் மகிழ்க
ii.
எங்களுக்காகவும்எல்லோருக்காகவும்
பாடல்களைநாங்கள் பாடுகின்றோம்
யாதுமூரேயாவரும் கேளிரெனும்
வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம்.
iii.
உழைத்துமகிழ்ந்துஉண்டுஉறங்கிவாழ்ந்திருப்போம்
ஆடிப்பாடிமகிழ்வுடன் என்றென்றும் வாழ்ந்திருப்போம்
எல்லோரும் எல்லாமும் எங்கெங்கும் வாழ்ந்திருக்கும்;
வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம்.
iஎ.
எங்களின் மொழிபோல் எல்லாமொழிகளும் வாழ்கவே
வாழ்விற்குவளத்தைச் சுரந்துசுரந்துவளர்கவே
வாழ்வின் வனப்பைஅள்ளிஅள்ளித் தருகவே
எ.
உணர்வுகள் உணர்ச்சிகள் வாழ்வின் தேறல்கள்
மொழிகளில் என்றென்றும் வாழ்ந்திருக்கும்
மனிதரின் மொழிகளில் என்றென்றும் வளர்ந்துவரும்.
மொழிகளின் வாழ்வில் மொழிகளின் வளர்ச்சியில்
மனிதரின் வாழ்வில் பெருகிப் பரவிவரும்
வாழ்வின் பொருளும்
என்றென்றும்எங்கெங்கும் மிளிர்ந்திருக்கும்.
எi.
வாழும் மொழிகளின் வளம் பெருக்க
வட்டாரமொழிகளைவாழ்விருத்த
வழக்கற்றமொழிகளின் உயிர்ப்பெருக்க
எங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
பாடல்களைநாங்கள் பாடுகின்றோம்
யாதுமூரேயாவரும் கேளிரெனும்
வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம்
அன்பும் அறமும் வாழ்வாகும்
வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம்
( உலகதாய்மொழிகள் தினம்,மாசி 21 ஆம் திகதியைமுன்னிட்டு,தமிழிசையால் எழுவோம் எனும் தொனிப்பொருளில் உருவாக்கப்பட்டபாடலாக்கம் )
சி. ஜெயசங்கர்