கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றினை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரித்தானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றை ஒத்து அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வேல்ஸில் இருவருக்கும், இங்கிலாந்தில் 36 பேருக்கும் இந்த புதிய வகை தொற்று றே்பட்டுள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனா்.
மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் டென்மார்க், நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய வகை வைரஸ் காரணமாக எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #பிரித்தானியா #புதியவகை #டென்மார்க் #நைஜீரிய #அமெரிக்கா