176
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குதி செய்யப்பட்டதாக தொிவிக்கப்படும் , 6,000 வாள்கள் தொடர்பில், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பேராயா் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, மார்ச் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்போது, இந்த விடயம் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என காவல்துறைமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #பேராயா் #கர்தினால்மெல்கம்ரஞ்சித் #உயிர்த்தஞாயிறு #ரிட்மனு
Spread the love