புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதுடன் சட்டசபையில் முதல்வா் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்தது. இதனையடுத்து புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்துள்ளார்.
இன்று ( 22) காலை சட்டமன்றம் கூடிய போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா்கள் தொடர்ந்து பதவிவிலகியமையினால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை சட்டமன்றம் கூடியதும் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகா் உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஏற்பட்ட அமளிதுமளியினையடுத்து முதல்வர் நாராயணசாமி, அவருடன் அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் 12 பேர் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுச்சேரி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டதனால் இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என அறிவித்தார்.இதனால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை முதல்வா் நாராயணசாமி ப ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பதவிவிலகல் கடிதத்தினை கொடுத்துள்ளார். தனது அமைச்சரவையும் பதவிவிலகுவதாக அவா் தொிவித்துள்ளாா் . #புதுச்சேரி #நாராயணசாமி #காங்கிரஸ் #நம்பிக்கை_தீர்மானம்