உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதி நேற்றையதினம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதனைக் கையளித்தார்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக , ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், சில முரண்பாடான நிலைமைகள் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவருக்கெதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் செயற்படுவதற்கான தேவை இல்லை எனவும் குறித்தபரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ், நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. #குற்றவியல்குற்றச்சாட்டு #ணில்விக்கிரமசிங்க #ஜனாதிபதி #மைத்திரிபாலசிறிசேன #உயிர்த்தஞாயிறு