ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து இன்று (24) விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.
இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட போதிலும் இலங்கைக்கு எதிரான குழுக்கள் வேறு நாடுகளுக்கு தேவையான பிரேரணையொன்றை சமர்ப்பிக்கின்றமை வருத்தத்திற்குரியது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றையதினம் உரையாற்றிய வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை பிரேரணைக்கு எதிராக அணிதிரளுமாறும் அவா் சர்வதேச நாடுகளிடம் இதன்போது கோரிக்கை விடுத்திதுள்ளாா். #ஐநாமனிதஉரிமைகள்பேரவை #மிச்செல்_பச்லெட் #இலங்கை #விவாதம் #தினேஷ்குணவர்தன