ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்த பின்னா் அவா் மீண்டும் தூக்கிலிடப்பட்டுள்ளாா்.
சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த கணவரை தற்காப்புக்காக கொலைச் செய்தமைக்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது வழக்கறிஞர் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையான பதிவை பகிர்ந்துள்ளதாக அரப் நியூஸ் தொிவித்துள்ளது.
வரிசையில் 16 வது நபராக நின்ற சாராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளாா். எனினும் அவர் இறந்ததையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் சாராவை மீண்டும் தூக்கு கயிற்றில் ஏற்றியநிலையில் அவா் அமர வைக்கப்பட்ட நாற்காலியை அவரது மாமியார் காலால் எட்டி உதைத்து தூக்கினை நிறைவேற்றியுள்ளாா் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானை பொறுத்தவரை அங்கு கொலை செய்தவரின் மரணம் அவரால் கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவுகளுக்கு முன் நிகழும் போதுதான அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஈரான் சிறைகளில் சாராவுக்கு நிகழ்ந்தது போன்று பல மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் 200க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #மாரடைப்பால் #தூக்கிலிடப்பட்ட #சாரா_இஸ்மாயில் #ஈரான்