134
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகர மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் நேற்று கூடிய போதே தலைவர் மற்றும் செயலாளரை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #மைத்திரிபால_சிறிசேன #ஶ்ரீலங்காசுதந்திரக்கட்சி
Spread the love