
இலங்கையில் உருவான ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஸ மாத்திரமே என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், இப்போதைய ஜனாதிபதி போட்டியிட்டால், அவருக்கு அந்த வாக்குகளைப் பெற, எவ்வித வாய்ப்புக்களும் இல்லை என்றும் தெரிவி்துள்ளார்.
அதனால், அடுத்த தேர்தலில் வெற்றிபெற, சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியம் என்றும் அதன் காரணமாகவே முஸ்லிம் மக்களுக்குத் தேவையான வகையில், நாட்டில் சில தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Spread the love
Add Comment