தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பேலியகொடை காவல் நிலையத்தின் அனைத்து காவற்துறை அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை கடந்த 23 ஆம் திகதி பேலியகொட காவற்துறை அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட காவல் நிலையத்திற்கு சென்ற போது சுமார் 10 காவற்துறை அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.