உலகம் பிரதான செய்திகள்

சுவிடனில் கூரியஆயுதத்தால் தாக்கிஎண்மரை காயப்படுத்திய இளைஞர் பயங்கரவாதச் செயல் என சந்தேகம்

சுவிடனில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் சிவிலியன்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.தாக்குதலாளியை க் காவல்துறையினா் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர்.

சுவீடனின் தெற்கே Vetlanda என்ற சிறிய நகரத்தில் நேற்று மாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது.சூட்டுக் காயங்களுடன் கைதான தாக்குதலாளி மருத்துவ மனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட் டுள்ளார். சிறிய கைக்கோடரி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது.

இந்த சம்பவம் பயங்கரவாத நோக்கத் துடன் தொடர்புடைய தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. கொலை முயற்சி என்ற கோணத்தி லேயே விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுவீடனின் பிரதமர் Stefan Lofven அதனை ஒரு கொடூரமான செயல் என்று கூறி தனது கண்டனத்தை வெளியிட்டி ருக்கிறார்.சுவீடனில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இன்னமும் உயர்ந்த அளவில் காணப்படுவதாக அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவு நம்புகின்றது.

2010,2017ஆம் ஆண்டுகளில் அங்கு இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன.2017 ஏப்ரலில் தலைநகர் Stockholm அருகே பொதுமக்கள் மீது நபர் ஒருவர் வாகனத்தை மோதித் தாக்கியதில் ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. #சுவிடனில் #கூரிய_ஆயுதத்தால் #இளைஞர் #பயங்கரவாதச்_செயல் #Vetlanda

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.04-03-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.