அகமதாபாத்தில் நேற்றையதினம் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதனையடுத்து இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதன்மூலம் தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது #இந்தியஅணி #ஐசிசி #தரவரிசை #இங்கிலாந்து